Home

எமக்காக நாம்…..

நோர்வே வாழ் மட்டு அம்பாறை தமிழர்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துதல் மற்றும் அரசியல் மதம் சார்பற்ற அடிப்படையில் அபிவிருத்திக்கான உதவிகளை நம் தேச தமிழ் உறவுகளுக்கு கிடைக்க செய்தலோடு நோர்வே வாழ் மட்டு-அம்பாறை ஒன்றியத்தின் இளையோரை எமது பிரதேச மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் ஊக்குவித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நோர்வேயில் வாழும் மட்டு-அம்பாறை தமிழ் உறவுகளின் ஆதரவோடும் பங்களிப்போடும் 18.05.2019 அன்று மாலை 5 மணிக்கு Ellingsrud skole, Oslo Norway என்னும் இடத்தில் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் ஒன்றியமானது நோர்வே நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய பதியப்பட்டு யாப்பு, இலச்சினை, ஸ்தாபகர்குழு, ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான ஜனநாயக தன்னார்வ அமைப்பாகும்.

எமக்காக நாம்…..